மரபுப் பாக்கள் - தொகுதி 9
25) அ'ரணாக
விளங்கு.
(காய்+ காய்+ காய்+ காய்-
மா+மா.)
பெற்றோர்தம் நலமென்றும் பெற்றபிள்ளை
காப்பதுதான்
பெரிய கடனாம்!
உற்றகல்வி மாணவர்க்கே உவந்தளித்தல்
கற்பிப்போர்
உயர்ந்த கடனாம்!
பெற்றசெல்வம் உழைத்தவர்க்கும்
பகிர்ந்தளித்தால் தொழில்தன்னில்
பெருமை உண்டே!
ஏற்றதொழில் சிறந்திடவே என்றும்நீ
உழைத்திட்டால்
ஏற்றம் உண்டே!
--------------------------------
26) இலவயம் இழிவு. (இலவசம் இழிவு)
(காய்+ காய்+ காய்+ காய்-
மா+மா)
உழைக்கின்ற மக்களெல்லாம் உறுதியுடன்
தம்தொழிலை
உயர்வாய்க் காண்பர்;
பிழைத்திடநல் வழியறிந்த பலர்தங்கள்
பாதையிலே
பெருமை கொள்வர்;
மழைநீரைச் சேர்த்துவைத்து மண்மீதில் விளைவிப்போர்
மகிழ்வும் அடைவர்;
பிழையென்று உணர்பவரோ இலவயத்தை நாடாமல்
புவியில் வாழ்வர்.
-------------------------------
27) வஞ்சம் அழித்திடும் தவிர்.
கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம்.
(காய்+ காய்+ காய்+ காய்-
மா+மா)
வஞ்சமுனை எந்நாளும் வாட்டிவிடும்
இதையென்றும்
வாழ்வில் மறப்பாய்;
நெஞ்சத்தில் அன்புகொண்டு நிலையற்றுத்
தவிப்போர்க்கு
நிழலாய் நிற்பாய்;
செஞ்சோற்றுக் கடனுக்காய்ச்
செயல்புரிந்த கன்னன்போல்
சிறப்பே சேரும்;
அஞ்சாதே உனையென்றும் ஆறுமுகன்
காத்திடுவான்
அறிவாய் நன்றே!
-----------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: