மரபுப் பாக்கள் - தொகுதி 8
22) பண்போடு
நட.
கழி
நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். (விளம்+ மா+தேமா)
கடலெனச்
செல்வம் பெற்றும்
கனிவுடன் வாழ வேண்டும்!
மடமையைத்
தவிர்த்தே இந்த
மண்ணிலே வாழ்வாய் என்றும்!
தடமது
பதித்தே நீயும்
தண்மனம் கொண்டு வாழ்க!
அடக்கமே
உன்னை என்றும்
அமைதியில் ஆழ்த்திக் காக்கும்!
---------------------------------------------------------------
23) மணந்திருப்பா யென்றும்.
கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். (விளம்+ மா+தேமா)
கன்னலின் சுவைபோல்
என்றும்
கனிவினைக் காட்டி வாழ்வாய்!
இன்னலின் பிடியில்
வாழ்வோர்
இன்பமும் அடையச் செய்வாய்;
தன்னல மின்றி
வாழ்வில்
தாழ்ந்தவர் நலத்தைக் காப்பாய்;
நன்மலர் நாற்றம்
போல்நீ
நற்செயல் செய்தே வாழ்வாய்!
--------------------------------------------------------
24) இயற்கையைப் போலியங்கு
கழி நெடிலடி ஆசிரிய அறுசீர்
மண்டிலம். (விளம்+ மா+தேமா)
அலைகளோ என்றும் ஓயா
அப்படி இறைவன் அன்பும்!
கலைகளும் அழியா ஒன்றே
கற்றநம் கல்வி போல!
தலைவரும் வருவார் ஓர்நாள்
தாழ்ந்தவர் எழுவர் அந்நாள்;
மலையென இருந்த துன்பம்
மணலென நொறுங்கி வீழும்!
---------------------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: