வான் சிறப்பு
--- அன்பு ஜெயா
பா வகை: இன்னிசைக் கட்டளை வெண்பா
வான்பார்த்தே வாழ்வோர்தம் வாழ்வினிலே எப்போதும்
தேன்போலப் பாய்ந்திடவே தென்மேற்கில் தோன்றியே
வான்பிளந்துப் பெய்துமே வாழ்விக்கும்
தேன்மழை
நான்வணங்கி நிற்பேன் நனைந்து.
வான்பொய்த்தால் மக்கள்தம் வாழ்வும்தான் பொய்த்திடுமே
நான்வணங்கும் நல்லிறை நம்மையும் காத்திடும்
வான்திறக்கும் நன்றாக வாழ்வும் சிறக்குமே
வான்மீதில் நம்பிக்கை வை.
உலகத்தை வாழ்விக்கும் உன்னையென்னை எல்லாம்
பலகாலம் காத்தும் பயன்தருமே வானம்
இனிதான வாழ்வில்
இறையருளை நம்பி
இனிமேலும் வாழ்தல்
இனிது.
--------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: