நல்லவரில்லா
நாட்டில் துன்பமே!
– அன்பு
ஜெயா
பா
வகை: நொண்டிச் சிந்து – இருமுச்சீரிரட்டை
ஒழுக்கமிலான்
உறவென்றே – ஒன்றிணைந்தால்
ஒருபோதும் இன்பம்தான் இருக்காதே;
வழுவின்றி
நன்னூல்கள் – கல்லாதார்
வாழ்வு துன்பத்தில் ஆழ்ந்திடுமே;
இழுக்குதரும்
தொழில்செய்வோர் – நட்பினில்
இணைந்தால் துன்பமுனை அணைத்திடுமே;
வழுவில்லா
நல்லோரை – விரும்பாதார்
வாழுமிடம் சேராதே
வாழ்ந்திடவும் எண்ணாதே! (1)
ஒழுக்கமிலா
உறவினரை – உதறிவிடின்
ஒப்பற்ற நன்மையுண்டே எப்போதும்;
வழுவில்லா
நூல்களையே – கற்றிடுவாய்
வாழ்வினில் நன்மை சூழ்ந்திடுமே;
இழுக்கில்லா
தொழில்போற்று – நாளும்
இன்பமே வாழ்விலேது துன்பமே;
வழுவில்லா
நல்லோர் – ஊரில்
வாழுமிடம் சேர்ந்துவிடு
வளமதுவும் பெற்றுவிடு! (2)
-------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: