கம்பனின்
உவமைகளில் சில துளிகள் 2
- கம்பனின் அவையடக்கம் -
- அன்பு ஜெயா, சிட்னி
குழந்தைகளும்
சிறு பிள்ளைகளும் சித்திரங்கள் வரைவதாகச் சுவர்களிலும் தரையிலும் கிறுக்குவதைப்
பார்த்திராதவர்கள் இவ்வுலகில் இருப்பது அரிது. அவ்வாறு குழந்தைகள் ‘வீடுகள்’ என்றும், ‘ஆடல்
அரங்குகள்’ என்றும் வரைகின்ற சித்திரங்களைப் பார்த்து அச்சித்திரங்கள் சிற்பச் சாஸ்திரத்திற்கு உட்பட்டவை அல்ல, முரணானவை என்று சிற்பக்கலை வல்லுனர்கள் குறை
கூறமாட்டார்கள். அதுபோல, நூல்கள் எழுதும் அறிவு அதிகமில்லாத தன்னுடைய கவிகள், காவிய
இலக்கணத்திற்குள் அமையவில்லை என்று முறையாகத் தமிழ் கற்ற அறிஞர்கள் கோபங் கொள்ள மாட்டார்கள் என்று
கம்பன் கூறுகின்றான். இந்தப் பாடலில், இராமாயணத்தைக் குழந்தைகள் வரையும் சித்திரத்திற்கும், தன்னுடைய கவித் திறனைக் குழந்தைகளின் சித்திரம் வரையும் திறனுக்கும், தமிழ்
கற்ற அறிஞர்களை சிற்பக்கலை வல்லுனர்களுக்கும் ஒப்பிட்டு அடக்கத்துடன் கூறிக்கொள்கின்றான் கம்பன்.
இதைத்தான் வள்ளுவன்,
“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.”
– என்று கூறியிருப்பானோ!
கம்பனின்
அந்தப் பாடல் :
“அறையும் ஆடரங்கும் படப்
பிள்ளைகள்
தரையில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன்
கவி
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ?”
(பாயிரம், அவையடக்கம் – 9)
இவ்வாறு
கம்பனின் அவையடக்கம் இமய உச்சிக்கு உயர்ந்திருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க
முடியவில்லை.
(உவமைகள்
தொடரும்)
கம்பன் உவமைகள் மிகச்சிறப்பான வலைப்பதிவு. தொடரட்டும் உங்கள் கம்பன் பணி. வாழ்த்துகள்.
ReplyDeleteபாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிறப்பாக உள்ளது
ReplyDeleteமிக்க நன்றி
Delete