Pages

Tuesday 22 April 2014

கம்பனின் உவமைகள் - 4 : தாயும் சரயு நதியும்


கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 4

- தாயும் சரயு நதியும் -
          -    அன்பு ஜெயா, சிட்னி

இமயத்திலிருந்து இறங்கி ஓடி வந்த அந்த வெள்ளம் நிலப்பகுதிக்கு வந்ததும் சரயு என்று புதுப் பெயர் பெறுகின்றது. இப்படித் தரையிறங்கி வந்த சரயு நதியின் வெள்ளம், நான்கு வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களின் ஊடாகப் வளைந்து, திரிந்து, பாய்ந்து ஓடி அங்கு வாழும் மக்களுக்குப் பலனளிக்கிறது.

·         குறிஞ்சி – மலையும் மலையைச் சார்ந்த இடங்களும்
·         முல்லை – காடும் காடு சார்ந்த இடங்களும்
·         மருதம் – வயலும் வயல் சார்ந்த இடங்களும்
·         நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடங்களும்

எப்படித் தாயின் முலைப்பால் குழந்தைக்கு உணவாகி அதை வளர்ப்பது போல, சரயு நதி தன்னுடைய நீர் வளத்தால் இந்த உலகத்திலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய உதவி புரிந்து அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்துகின்றது என்று கம்பன் சரயு நதியை ஒரு தாய்க்கு ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

கம்பனின் அந்தப் பாடல் :

“இரவிதன் குலத்து எண் இல் பல வேந்தர் தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது தாய் முலை அன்னது, இவ்
உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்.”

(பாலகாண்டம், ஆற்றுப்படலம் – 24)

(உவமைகள் தொடரும்)


2 comments:

  1. பாலை நிலம் இல்லாத காரணம் கருத்தில் கொண்டு பால் போல் தெரிவதாய் கம்பரின் கற்பனை ஓடியிருக்கலாமோ??

    ReplyDelete
    Replies
    1. குறிஞ்சியும் முல்லையும் செழுமையாய் இருக்கையில் கம்பன் பாலையைக் கண்டிருக்கவே மாட்டாணோ என்று தான் எனக்கும் தோன்றுகிறது. அவனை மேலும் படிக்கப் படிக்க ஒருவேளை என் எண்ணம் மாறலாம். உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

      Delete

உங்கள் கருத்துக்கள்: