Pages

Saturday, 31 October 2026

தாயிற்கு இணையாய் யாருண்டு?

தாயிற்கு இணையாய் யாருண்டு?

--- அன்பு ஜெயா, சிட்னி

(பா வகை: சேவற் பாட்டுச் சிந்து)

 

எடுப்பு:

தாயிற் கிணையாய் யாருண்டு?

தாயிற் சிறந்தத் துணையுண்டோ?

தாயின் அன்பின்றி வாழ்வுண்டோ?

 

தொடுப்பு:

நன்றெனவே நமைவளர்த்தாள்

என்றுமேநம் நலம்காத்தாள்

வென்றிடவே வழிதன்னைக் கற்பித்தாள் – அவளே

என்றும்நம் வாழ்வில் வலம்வருவாள் – ஓய்வின்றி

என்றும்நம் வாழ்வில் வலம்வருவாள்!

 

முடிப்பு:

அன்பைநாளு மளித்தவளும் அவள்தானே – வாழ்வினை

அன்புடனே காத்ததும் அவள்தானே!

 

தன்பசித் தாங்கிடுவாள்

உன்பசி முதலில் தீர்த்திடுவாள்

என்றும் நம்மனத்தில் வாழ்ந்திடுவாள்!

 

தன்தொண்டு பேசிடாளே – என்றும்

உன்பெருமை பேசுவாளே!

உன்னையும் உருவாக்க உழைத்தாளே வாழ்நாளில் – அவள்நலன்

பொன்போலக் காத்திடடா -  அவளுக்கே

உன்கடனைச் செலுத்திடடா!

அன்பினையும் சொரிந்திடடா அவள்தானுன் இறையென்றே!

 

தாயிற் கிணையாய் யாருண்டு?

தாயிற் சிறந்தத் துணையுண்டோ?

தாயின் அன்பின்றி வாழ்வுண்டோ?

----------------------------


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: