Pages

Thursday, 10 October 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 1

மரபுப் பாக்கள் -  தொகுதி 1 


நிலைமண்டில ஆசிரியப்பா

“கல்லால் நிழலில் கனிவோ டமர்ந்து

நல்லார் நால்வர்க் குஞான போதச்

சொல்லாம் அமுதைச் சிறப்போ டளித்தாய்

எல்லா உயிரும் ஏற்றம் பெறவே!”

                         --------------------


01. அன்பே வெல்லும் கருவி.

நிலைமண்டில ஆசிரியப்பா.

பார்க்கும் இடமெலாம் பாழும் போரெனில்

ஆர்த்தெழும் இளையோர் ஆருயிர்ப் போகுமே!

பாரெலாம் சிறந்திடப் பற்றுவோம் அமைதியைப்

போரெனும் சொல்லே போயழி யட்டுமே!


 02. ஆற்றலை வீணடிக் காதே!

நிலைமண்டில ஆசிரியப்பா.

உன்னைநீ யறிவாய், உன்னுள் புதைந்தே

உன்னைக் காக்கும் உன்திறன் நீயுணர்;

நன்றாய் வெற்றியை நாடொறும் தந்திடும்,

நன்றே போற்றுவர் நண்பருந் தானே!


03.  இல்லற வாழ்வைச் சுவை.

நிலைமண்டில ஆசிரியப்பா.

இல்லறம் என்பது இன்பம் தந்திடும்

நல்லறம் என்பதோ நம்மை உயர்த்திடும்

இல்லறம் பேணுவோம் இனிது வாழவே,

நல்லறம் பேணிட நற்கதி தானே!

-----------------------------

8 comments:

  1. தாங்கள் வெகு நாட்களுக்கு பிறகு எழுதியுள்ளீர்கள் போலும். வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. அருமை. பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி, தமிழா விழி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா

      Delete
  4. அருமையான கருத்துக்கள், மேலும் எழுதுங்கள்

    ReplyDelete
  5. ஆஹா! உங்கள் கவிதையை, தீந்தமிழை மீண்டும் படிக்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா, அண்ணா? ‌அடக்கி வைத்த திறமை பூரித்து வெளிவந்து விட்டது பார்த்தீர்களா? ‌கவிதைகள் செவிக்கு மட்டுமல்ல சிந்தனைக்கும் சுகமாக இருக்கின்றன. இன்னும் இன்னும் எழுதுங்கள். (கவிதை நோட்டு எப்படி இருக்கிறது)?

    ReplyDelete
  6. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றியம்மா. மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்: