மரபுப் பாக்கள் - தொகுதி 2
04) ஈடில்லாத் தொண்டு செய்
நாளும்
தொண்டு நாமும் செய்திட
நாளும்
கோளும் நம்மைக் காக்கும்,
ஆளு
மாட்சியின் ஆணவம்
நாளும்
தருமே நமக்குத் தீமையே!
05) உள்ளதில் பிறர்க்கும் கொடு
நேரிசை ஆசிரியப்பா
பெற்ற செல்வம்
பகிர்ந்த ளித்தலும்
கற்ற கல்வி கனிவுட னளித்தலும்
மற்றவர் வாழ்வும்
மகிழ்வுற
உற்ற துணையாய் ஓங்கி
நிற்குமே!
06) ஊற்றென ஓடு
நேரிசை ஆசிரியப்பா
உழைக்கா தோரிடம்
உட்கார்ந் திருத்தல்,
மழைக்கு மஞ்சி
மனையில் அடங்கல்,
பிழைப்பிற் காகுமோ?
பின்னர்!
உழைக்க முயன்றால்
உலகமுன் கையிலே!
-------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: