Pages

Wednesday, 24 June 2026

ஞானியர் முன்னர் கற்றோர் கல்வி பயன் தராது!

 

ஞானியர் முன்னர் கற்றோர் கல்வி பயன் தராது!

- அன்பு ஜெயா

பா வகை: கண்ணாட்டிச் சிந்து

 

கற்றகல்வி ஞானியர்முன் கரையில் ஒதுங்குமே – கண்ணாட்டி

கரையில் ஒதுங்குமே!

கற்றநூலில் ஆழமில்லார் கல்வி மறையுமே – கண்ணாட்டி

கல்வி மறையுமே!               (1)

 

நீண்டுவளர் சிவன்முடியை நினைத்தல் இயலுமே – கண்ணாட்டி

நினைத்தல் இயலுமே!

நீண்டுயர்ந்த அவன்முடியை நீதொடல் இயலுமோ – கண்ணாட்டி

நீதொடல் இயலுமோ!           (2)

 

கற்றறிந்த ஞானியரைக் காணல் இயலுமே – கண்ணாட்டி

காணல் இயலுமே!

கற்றறிந்த ஞானியர்போல் களமுங் காண்பயோ – கண்ணாட்டி

களமுங் காண்பயோ!           (3)

-----------------------------

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: