மரபுப் பாக்கள் - தொகுதி 6
16) சற்றும் அறமும் தவறேல்.
நாளை நாளை என்றிடாமல்
நல்ல அறம்தான்
செய்திடுவாய்;
நாளை என்றே நாள்கடத்தும்
நலிவு உள்ளம்
தகர்த்திடுவாய்;
நாளை நம்கை தனிலில்லை
நன்றா யிதையும்
உணர்வாயே;
நாளை விடிந்தால் நல்வினையால்
நன்றா யறமும் தொடர்வாயே!
----------------------------------------------------------------------------
17) ஞயத்தைப் பேச்சில் குறையேல்.
உருவு
கண்டே எள்ளாமை
உன்பால் வளர்த்தே உயர்ந்திடுவாய்;
அருமை
யுள்ளம் கொண்டுநீயும்
அரவ ணைப்பாய் அனைவரையும்,
ஒருநாள்
அவரும் உறுதுணையாய்
ஓடி வந்தே உதவிடுவர்;
பெருமை
பெற்றே இவ்வாழ்வில்
பேரன் புடனே வாழ்ந்திடலாம்!
-----------------------------------------------------------------------------------
18) அ'டங்கமறு தருக்கிற்கு (திமிருக்கு).
அன்பு பொங்கத் துணைநின்றால்
அடியும் பணிந்து நடந்திடுவோம்;
அன்பை மறந்தே ஆட்சிசெய்தால்
அறத்தைக் காக்க அடக்கிடுவோம்;
என்றும் மாந்த
நேயமுடன்
எழிலாய்
நாமும் வாழ்ந்திடுவோம்;
இன்றும் என்றும்
தருக்கின்றி
இணைந்தே வாழ்வில் உயர்ந்திடுவோம்! (1)
அன்பால் நாமும்
கூடுகட்டி
அணைந்தே
வாழ வாருங்கள்;
என்றும் அன்பின்
பிடிதன்னில்
எழிலாய் நாமும்
வாழலாமே!
இன்பம் அங்கே
இருப்பதைத்தான்
இணைந்தே
என்றும் காணலாமே!
நன்றே கூறி நானழைத்தேன்
நண்பர் எல்லாம்
வரலாமே! (2)
------------------------------------------------------------------------