மரபுப் பாக்கள் - தொகுதி 28
82) பெருமை
பொருளி(ல்) இல்லை.
(ஏழடிகள் வஞ்சிப் பா, ஒரு தனிச்சொல், மூன்றடி ஆசிரியச் சுரிதகம் கொண்ட பாடல்.)
பா வகை: வஞ்சிப் பா (குறளடி).
வஞ்சிப்பா:
அருச்செயல்களே ஆற்றிடாமல்
பெருமைதனைநீ பெற்றாளுமோர்
பெருவிருப்பினால் பெருங்காலமும்
தெருவெங்குமே தேடினாலும்
ஒருபயனுமே உனக்கில்லையே!
பெருமையுடனே பெரியோர்களும்
ஒருமித்துதான் உரைத்தார்களே
தனிச்சொல்: உணர்வீர்,
ஆசிரியச்
சுரிதகம்:
இன்றுநம் உலகில் யாவரும் தேடிடும்
அன்பெனும் உள்ளமே ஆளும்,
என்றும் எங்கும் ஏற்பீர் இதையே!
-------------------------------------------------------
83 - பேச்சில் இகழ்ச்சித் தவிர்.
பா வகை: வஞ்சிப் பா (குறளடி).
வஞ்சிப்பா:
எப்போதுமே
எவ்விடத்திலும்
தப்பாமலே
தவறினைத்தவிர்!
உன்நினைவில்
உயரெண்ணமே
என்றுமெழவே
இயன்றதைச்செய்!
மற்றமாந்தரும்
மாண்புடையரே
உற்றயிடமும்
உவந்தளித்திடு!
இனம்தனையே
இகழ்வோரையும்
மனம்மாற்றவே
முயன்றுவென்றிடு!
தனிச்சொல்:
என்றும்,
ஆசிரியச்
சுரிதகம்:
உன்றன் எண்ணம்
உயர்வாய் வைத்திரு,
நன்மை பெருகும்
நாட்டிலே,
அன்று இன்பம்
ஆறாய்ப் பெருகுமே!
--------------------------------------
84) பைய
நடந்திடப் பழகு.
பா வகை:
வஞ்சிப் பா (குறளடி).
வஞ்சிப்பா
உள்ளபொருளும்
உதவினாலுமே
உள்ளகுறையை
உணர்ந்துகளைவாய்,
குறையொன்றையும்
கூர்ந்துகளைய
நிறைவாயொரு
நிலையறிந்திடு,
எப்பொருளிலே
ஏற்றமுள்ளதோ
அப்பொருளையே
அணைந்தேற்றிடு!
விரைவாகவே வினையாற்றிட
அரைகுறையாய்
ஆய்வதைவிடு!
தனிச்சொல்: என்றுமே,
ஆசிரியச்
சுரிதகம்:
எதுசரி எதுபிழை
என்றே ஆய்ந்தபின்
இதுநல் வழிதான்
என்று
பொதுவாய்
நடந்தால் போற்றிடு வாரே!
---------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: